தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கல்வி கற்கும் மாணவர்களின் உணவு கொடுப்பனவு அடுத்த மாதம் முதல் 8,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (20) அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இது தொடர்பான அமைச்சரவை ஆவணத்திற்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.