ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகளை பணியமர்த்துவதற்கு மத்திய மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மத்திய மாகாணத்தில் உள்ள சிங்கள மொழி மூல பாடசாலைகளில் நிலவும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அரச பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளையும் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் இணைத்துக் கொள்ள மத்திய மாகாண கல்வி திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்ள் தமது விண்ணப்பங்களை 28.03.2024 க்கு முன் அனுப்பப்பட வேண்டும் எனவும் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
- தேசிய அடையாள அட்டை
- கிராம சேவையாளர் சான்றிதழ்
- பல்கலைக்கழக சான்றிதழ் (பட்டதாரிகளுக்கு)
- பாடசாலை அதிபரின் பரிந்துரை
பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 4, 2024 அன்று நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் மேற்கூறிய ஆவணங்களின் மூலப் பிரதிகைள நேர்காணலுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.